Wednesday, October 24, 2012

சுருங்கும் வானம்




என்னகவானில் மின்னும் 
ஆசை விண்மீன்களை 
ஒவ்வொன்றாய் பிரித்து 
அகர வரிசைப் படுத்துகிறாய் 
உன்னைச் சுடும் 
சில விண்மீன்களை
மௌனத்தால் எட்டி உதைத்து சிதைக்கும் நீ
மறந்து போகிறாய்
விண்மீன்கள் மரணிக்கும் மறுநொடியில்
உனக்காக விரிந்த வானம் சுருங்குவதை

3 comments:

  1. ரெண்டுமுறை படித்தும் கொஞ்சம் விளங்க மாட்டேங்குது நண்பரே ..

    ReplyDelete
  2. விண்மீங்கல் மரணித்துப்போகிற அந்த நொடி மிகவும் கவலைக்குறியதே/நன்றி வணக்கம்,

    ReplyDelete