Saturday, September 29, 2012

முத்தம் வாங்கிய நிலா



ஏன்
இன்னும் அவள் அழைக்கவில்லை
நேற்றிரவு மொட்டைமாடியில் 
நிலாவிடம் கேட்டேன் நான் 

 இதோ 
பார்த்து விட்டு வருகிறேன் என்று 
சொல்லிச் செற்றது  நிலவு 
காத்திருந்தேன் நான் 

அங்கு 
ஒரே பவர் கட்டாம் 
கைபேசியில் சார்ச் இல்லை என்று 
புலம்பிக் கொண்டிருக்கிறாள் அவள் 

இதைக் கேட்கவா 
இவ்வளவு நேரம் என்றேன் 
மொட்டைமாடியின் 
மறு முனைக்கு வந்த நிலவிடம் நான் 

முத்தம் தந்தாள் 
உனிடம் கொடுக்கச் சொல்லி 
அவள் 
கொடுத்ததை கொடு என்றான் நான் 
வெட்கப்பட்டு மேகத்தின் பின் ஒளிந்துகொண்டுடது 
அவளிடம் என்  முத்தம் வாங்கிய  நிலா 

5 comments:

  1. ஓஹோ... 'விசயம்' அப்படி போகுதோ... !!!

    ReplyDelete
  2. நிலவோடு உரையாடல் அருமை கவிஞரே.

    ReplyDelete
  3. சங்க காலத்தில் நெடுவெண்ணிலவினார் என்றொரு புலவர் இருந்தார்.

    அவரது பாடல்தான் நினைவுக்கு வந்தது..

    http://www.gunathamizh.com/2009/07/blog-post_06.html

    ReplyDelete