Monday, September 17, 2012

குட்டி தேவதை





 அந்த 
குட்டிப் பெண்ணை 
எனக்காக பெண் கேள் என்றேன்  நான் 
அவளுக்கு மணமாகி விட்டது என்கிறாய் நீ 
பரவா இல்லை 
இரண்டாவதாக கட்டிக்  கொள்கிறேன் நான் 
என்னைவிட அவ்வளவு அழகா அவள் 
கோபத்தில் சீறுகிறாய் நீ 
நீயே சொல் 
அவள்தானே அழகு 
மௌனமும் கோபமுமாய் சில நேரம் நீளும் 
இந்த செல்லச் சண்டைகளுகாவே 
நான் கேட்டாலும் எடுத்து காட்ட மறுக்கிறாய் 
உன் பால்ய புகைப் படத்தை 

4 comments:

  1. ஓஹோ கதை அப்படிப்போகுதா
    இறுதி வரிகள் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சரி சரி... நடக்கட்டும் நடக்கட்டும்...

    ReplyDelete
  3. கொஞ்சம் குழம்பி தான் போய்ட்டேன்...அருமை

    ReplyDelete
  4. ஓகோ நல்ல தமாஷ் தான்....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete