Wednesday, October 24, 2012

சுருங்கும் வானம்
என்னகவானில் மின்னும் 
ஆசை விண்மீன்களை 
ஒவ்வொன்றாய் பிரித்து 
அகர வரிசைப் படுத்துகிறாய் 
உன்னைச் சுடும் 
சில விண்மீன்களை
மௌனத்தால் எட்டி உதைத்து சிதைக்கும் நீ
மறந்து போகிறாய்
விண்மீன்கள் மரணிக்கும் மறுநொடியில்
உனக்காக விரிந்த வானம் சுருங்குவதை

Saturday, September 29, 2012

முத்தம் வாங்கிய நிலாஏன்
இன்னும் அவள் அழைக்கவில்லை
நேற்றிரவு மொட்டைமாடியில் 
நிலாவிடம் கேட்டேன் நான் 

 இதோ 
பார்த்து விட்டு வருகிறேன் என்று 
சொல்லிச் செற்றது  நிலவு 
காத்திருந்தேன் நான் 

அங்கு 
ஒரே பவர் கட்டாம் 
கைபேசியில் சார்ச் இல்லை என்று 
புலம்பிக் கொண்டிருக்கிறாள் அவள் 

இதைக் கேட்கவா 
இவ்வளவு நேரம் என்றேன் 
மொட்டைமாடியின் 
மறு முனைக்கு வந்த நிலவிடம் நான் 

முத்தம் தந்தாள் 
உனிடம் கொடுக்கச் சொல்லி 
அவள் 
கொடுத்ததை கொடு என்றான் நான் 
வெட்கப்பட்டு மேகத்தின் பின் ஒளிந்துகொண்டுடது 
அவளிடம் என்  முத்தம் வாங்கிய  நிலா 

Saturday, September 22, 2012

ஐ லவ் யுநித்தமும் 
பேசிக்கொள்கிறோம் நாம் 
அலைபேசியில் 
என் 
உன் 
இதழ்கள் பிரசவிக்கும் 
முதல் சொல் 
ஐ லவ் யு 
நீண்ட இடைவெளிக்குப் பின் 
நம் இதழ்களில் 
துடி துடித்து இறக்கும் 
இறுதிச் சொல் 
ஐ லவ் யு 

அவள் ஒரு புதிர்

உன்னிடம் 
ஒரு முறை சொன்னதை 
ஒருமுறை கேட்டதை
 மறுமுறை  
சொன்னால் 
கேட்டால் கோபப்படுகிறாய் நீ 
நான் 
உன்னிடம் 
பலமுறை சொல்கிறேன் 
ஐ லவ் யு  
பலமுறை கேட்கிறேன் 
முத்தம் 
ஆனால் 
சொல்லவும் கொடுக்கவும்
 சலிப்பதில்லை நீ 

Monday, September 17, 2012

குட்டி தேவதை

 அந்த 
குட்டிப் பெண்ணை 
எனக்காக பெண் கேள் என்றேன்  நான் 
அவளுக்கு மணமாகி விட்டது என்கிறாய் நீ 
பரவா இல்லை 
இரண்டாவதாக கட்டிக்  கொள்கிறேன் நான் 
என்னைவிட அவ்வளவு அழகா அவள் 
கோபத்தில் சீறுகிறாய் நீ 
நீயே சொல் 
அவள்தானே அழகு 
மௌனமும் கோபமுமாய் சில நேரம் நீளும் 
இந்த செல்லச் சண்டைகளுகாவே 
நான் கேட்டாலும் எடுத்து காட்ட மறுக்கிறாய் 
உன் பால்ய புகைப் படத்தை 

Sunday, September 16, 2012

விளையாட்டு


சிறு 
புள்ளி இடுகிறேன் நான் 
அதை தொடர் புள்ளியாய் மாற்றுகிறாய் நீ 
கோபத்தில் முற்றுப் புள்ளி வைக்கிறேன் நான் 
சின்னதாய் சுழித்து கமா ஆக்குகிறாய் நீ 
கேள்விக் குறியை 
அங்காங்கே செருகுகிறேன் நான் 
ஆச்சிரிய குறிகளாய் மாறி 
என் புருவத்தை உயர்த்த வைக்கிறாய் நீ 
கமா ,தொடர் புள்ளிகள் .கேள்விக்,ஆச்சிரியக்  குறிகள் என்று 
சுவராசியமாகவே நீளுகிறது 
நம் காதல்  விளையாட்டு 

Tuesday, September 11, 2012

ஒப்பந்தம்நான் 
எதற்கோ அனுமதி கேட்கிறேன் 
ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட சொல்கிறாய் நீ 
வரம்பு மீற மாட்டேன் 
இல்லை இல்லை 
அது சரிவராது என்கிறாய் நீ 
ஆனால் 
சில நேரம் நீயே உடைத்து விடுகிறாய் 
உன் ஒப்பந்தத்தை 

Saturday, September 8, 2012

மன்னிப்பு நீர்
உன் 
உணர்வை கொன்றபின் 
மன்னிப்பிற்காக 
மண்டியிடும் பிழையை 
அனலை கக்கி கரித்துவிடு 
முடிந்தால்  வேரோடு பிடுங்கி எரிந்திவிடு 
மன்னிப்பு 
நீர் மட்டும் ஊற்றிவிடாது 
அதில் மீண்டும் தளிர் இடுகிறது 
உன்னை காயப் படுத்தும் 
என் அடுத்த பிழை 

Sunday, September 2, 2012

ஒப்பில்லா கவிதை
என் 
தவமோ நீளுகிறது 
உயிரோ சுண்டுகிறது 
எழுத முயன்று தோற்றுத் திரும்புகிறேன் 
உனக்கு நிகராய் ஒரு கவிதையை 

ஒப்பில்லா கவிதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கவிதைக்கு பிறந்த நாள்நான் 
வாசிக்க சுவாசிக்க 
எனக்காய் இறைவன் எழுதிய 
கவிதை நீ 

என் அழகிய நிஷா கவிதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sunday, August 26, 2012

அவள் நிழல்
இராவாகிவிட்டது 
நாழிகையோ உருண்டோடுகிறது 
சிரிப்பொலி எழுப்பி 
என் உறக்கத்தை கலைத்து ஓடி ஒளிகிறது 
அவள் நிழல் 
நீண்ட இரவில் 
அவள் நிழலைப் பின்தொடர்ந்து  நான் 
விடிந்து விட்டது 
இன்னும் செவியை துளைத்து ஊருடுவுகிறது 
அவளின் கள்ளச் சிரிப்பொலி 

உயிர்த் துளிகள்
சுட்டேரிகிறான் பகலவன் 
உயிர் வறண்ட போதிலும் 
என்னில் பச்சைப் பசப்புடன் 
உன் நினைவுகள் 
உன்னை 
பிரியும்  மறுநொடியில் 
அகத்தில் முளை விடுகிறது 
நம் மறு சந்திப்பிற்கான ஏக்கம்

நம் 
இதயக் கிடங்கில் 
மாதங்கள் பழகிய ஆசைகள் 
புளித்து பதைத்த அத்துளிகளில் 
சமைத்து வைத்திருக்கிறோம் 
 நமக்கான போதையை  

நினைவின் ஈரம்

ஒரு 
நொடிப்பொழுது ஆயுள் என்றாலும் 
நெஞ்சத்தின் அடி நாதம்வரை 
ஈரப் படுத்தி விடுகிறது அவளின் 
ஒருதுளிப் பிம்பம் 

Monday, August 20, 2012

நனையும் ஜீவன்நான் 
கரை 
அலைகள் 
நீ 

உன் 
தொடுதலில் 
கசியும் ஈரத்தில் 
நனைகிறது 
ஜீவன் 

Thursday, August 16, 2012

அவள் மழை
மழை 
நீ 
வறண்ட நிலம் 
நான் 

நீர் 
முத்தங்கள் கொட்டஈ 
நனைத்துவிடு 
நிலத்தை  இல்லை ...இல்லை ..
உயிரை 

காதல் ராட்சஷி
மட்டிகடித்து 
இதழ் சுளித்து 
விழி வழி வழிய விடுகிறாள் 
காதல் ரசத்தை 

மதிமயங்கி 
விழுகிறேன் நான் 
ஒரு கள்ளச் சிரிப்பால் 
இதயம் கீறி 
உயிரை உருவிகிறாள் 
காதல் ராட்சஷி

Tuesday, August 14, 2012

வேண்டாம் சுதந்திரம்


நம் 
காதல் தேசத்தில் 
அரசி நீ 
உன் அடிமை 
நான் 

உன் 
அன்புச்  சிறையில்  அடைபட்டு 
உன்னடிமையாய் 
வாழவே துடிக்கிறது 
என் உயிர் 

வேண்டாம் ...
உன்னிலிருந்து 
இலை.... இல்லை..... 
உன் காதலில் இருந்து 
சுதந்திரம் 

Monday, August 13, 2012

காதல் இறுக்கம்
அன்பின் 
ஈரத்தில் நீத்துப் போகிறது 
நம் கோபங்கள் 

நான் ...நான்... யென
ஒன்றோடு ஒன்றாய் 
முட்டி மோதிக் கொள்கிறது
நம் மன்னிப்புக்கள்

பிணக்கம்
பின்
இணக்கம்
இதுதான் நம் காதலின்
இருக்காமோ

Sunday, August 12, 2012

விழிக்குள் நீஉறங்க 
விழி மூடுகிறேன் 
விழிக்குள் வெளிச்சமாய் 
உன் பின்பம் 

இனி 
உறக்கம் ..........?

Wednesday, August 8, 2012

அவன் துக்கம் அவள் கண்ணீர்
என் 
துக்கம்
மென் சொல் தென்றலால் 
வருடுவாயென நான் 
விழிநீர் ஒழிக்கி 
கழுவினாய் நீ 

உன் 
கண்ணீர் ஈரத்தில் 
துக்கம் நீத்துக் கொண்டிருக்க 
நீ உதிர்த்த ஒவ்வொரு துளியிலும் 
என்னுள் பிறந்ததடி 
நம்பிக்கை 

உன் 
கண்ணீர் 
எனக்கவா உனக்காகவா என்றேன் 
நமக்கா என்றாய் 
நீ 

 நம் 
அன்பின் பாதை 
விசலாமாய் விரிவதை 
உணர்த்தியது அச்சொல் 

Friday, August 3, 2012

நான் மீன்

நீ 
கடல்
நான் 
மல்ஷியம் 

நீர் 
இருக்கும் வரை 
மீன் 

நீ 
இருக்கும் வரை 
நான் Thursday, August 2, 2012

Saturday, July 28, 2012

நீ காந்தம்


நீ 
காந்தம் 
நான் 
துகள் 

நம் 
இடைவெளிகளில்
நகர்த்துகிறாய் 
அலக்களிக்குகிறாய்
எனை 

 நம் 
சந்திப்புக்களில் 
உன்னில் பாய்கிறேன் நான் 
இறுக்க பற்றிப் பிடிக்கிறாய் நீ 

Wednesday, July 18, 2012

நினைவு மழை

உன் 
நினைவு மழையில்
உள்ளம் நனைய 
குளிர்ந்தது
உயிர்

Monday, July 16, 2012

உமிழ்நீரில் தேன்

உன் 
உமிழ்நீரில் 
தேன் சுவை இருப்பது 
எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் 

தென்றல் 
சொல்லி இருக்குமோ
உன் இதழ் சுற்றி
ரிங்காரம் இடுகிறதே....
வண்டுகள்

இஷ்டம்

உன் 
கோபங்களில் 
உள்ளுக்குள் 
மென்று கொன்று விழுங்குகிறாய் 
என்மேலான உன் இஷ்டத்தை 

உன்
இஷ்டத்தை கொலை செய்யும்
ஆதிக்கங்கள் எ(ன்)ங்கள்
சாபம்

வேதியல் மாற்றம்

என்னிதழில் 
உன் இதழ் ரேகை பதிக்கிறாய் 
உன் என்  ரேகைகளின் உராய்வில் 
வேதியல் மாற்றம் 
புடைத்த நரம்பில் 
கொதித்து ஆவியாகிறது 
உயிர்

Sunday, July 8, 2012

பக்குவம்

என்னை 
வியப்பித்து
அதிர வைத்தும் உறைய வைக்கிறது 
உன் பக்குவம் 

நீ
என்னில் சிறியவள்
உனக்கு முதிர்ந்த குழந்தை
நான்

Wednesday, July 4, 2012

விலகல் விலக்கல் உன் 
விலகல் விலக்கல் 
ஸ்பரிசங்கள் 
அனலில் நான் 
துடிக்கிறாய் நீ 
மௌனமாய் சபிக்கிறோம் 
இயற்கையை

உன் பித்து

உன்னில் 
எது என்னை பித்தானக்கியது 
இன்னும் புலப்படாமல் 
பித்தனாக நான் 

உறவால் 
சொல்லடி பட்டாலும் 
என்னிலிருந்து விரட்டி விடாதே 
உன்னில் என் பித்தை ''மட்டும் ''

உறவின் கடிவாளம்

நான் 
பக்தன் நீயோ தேவி 
தரிசனத்தில் அவிழ்ந்து உடைகிறது 
நம் உறவின் கடிவாளம்